நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் பிறப்பிடம் எனப்படும் ஹம்பந்தோட்டையில் நேற்றிரவு கடும் பதற்றம் நிலவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹம்பாந்தோட்டையின் கட்டுவான பகுதியிலேயே இந்த பதற்றம் ஏற்பட்டது.
நேற்று இரவு குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றதுடன், குறித்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதில் இடம்பெற்ற கைகலப்பில் 4 பொலிஸார் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,
சட்ட விரோத மதுபானம் உற்பத்தி செய்யும் இடம் ஒன்றை சுற்றிவளைக்க சென்ற பொலிஸாரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 50 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து கிராம மக்கள் பொலிஸாரை சுற்றிவளைத்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர். அத்துடன் கிராம மக்களினால் பொலிஸார் மீது கற் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் பிரதேசத்தில் டயர் எரித்து பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் 4 பொலிஸார் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் பாதுகாபபு நடவடிக்கையில் விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறுதியில் கண்ணீர் புகை மேற்கொண்டு பொது மக்களை அவ்விடத்தில் இருந்து கலைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
0 Comments