Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இப்போது தேர்தலை நடத்தமாட்டேன்!

ஜனாதிபதி தேர்தலை தற்போது நடத்தமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. எனினும் அவர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப, தான் செயற்படப் போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
“ஜனாதிபதி தேர்தலை உடனடியாக நடத்துவதா இல்லையா என்பது தொடர்பில் நானே முடிவு செய்ய வேண்டும். அவ்வாறான எந்த முடிவும் என்னிடம் இல்லை. எனது பதவிக் காலம் முடிவடையும் வேளையிலேயே உரிய முறையில் ஜனாதிபதி தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்படும். இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments