ரணில் விக்ரமசிங்கவினை பிரதமராக்கும் முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றில் நம்பிக்கைத் தீர்மானமொன்றினை கொண்டு வந்து நிறைவேற்றுவதற்கு முடிவு செய்துள்ளதாக தென்னிலங்கையின் அரசியல் களத்திலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி சிறிசேன என்ன நடந்தாலும், நாடாளுமன்றிலுள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டாலும் தான் ரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் எனத் தெரிவித்தன் பின்னரே ஐக்கிய தேசியக் கட்சி இந்த தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளது. அவ்வாறு நம்பிக்கைத் தீர்மானமொன்று இதுவரையிலும் நாடாளுமன்றில் நிறைவேற்றப்படாத காரணத்தினால், சிறிலங்காவின் வரலாற்றில் முதன்முறையாக நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட முதல் சந்தர்ப்பமாக இது கருதப்படும்.
முன்னதாக ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினரும் இணைந்து இருவேறு சந்தர்ப்பங்களில் நாடாளுமன்றில் நம்பிக்கையில்லா தீர்மானங்களினை கொண்டு வந்திருந்தனர். சபாநாயகர் கரு ஜயசூரியவும் அவர்களின் தீர்மானம் குரல் வாக்கு மூலம் நிறைவேற்றப்பட்டதாகவும் அறிவித்தார். எவ்வாறாயினும் ஜே.வி.பியின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்வரும் 12 ஆம் திகதி கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கைத் தீர்மானத்திற்கு வாக்களிக்கமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments