Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மைத்திரியின் குற்றச்சாட்டிற்குப் பதிலடி கொடுத்த ரணில்!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தமக்கு எதிராக முன்வைத்து அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நிராகரிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சரவையின் தீர்மானத்திற்கும் அதன் கூட்டு பொறுப்புக்கும் அமையவே அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டும்.

ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் ஆதரவளித்தாலும், தமக்கு பிரதமர் பதவியை வழங்கப்போவதில்லை என ஜனாதிபதி கூறியுள்ளதாகத் தெரிவித்த அவர் இது தன்னுடைய பிரச்சினை இல்லை, ஜனாதிபதியினுடைய பிரச்சினை என்றும், ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாட்டை ஆட்சி செய்வது நாடாளுமன்ற அமைச்சரவையே என்று கூறியுள்ள அவர், அமைச்சரவையின் தீர்மானத்திற்கும் அமையவே அரசாங்கம் செயற்படுவதாக கூறினார். அத்துடன் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் படியே பிரதமர் நியமிக்கப்பட வேண்டும் என்றும், இவ்வாறு கூறுவது நாடாளுமன்றத்தை காலால் உதைத்துத் தள்ளும் செயல் என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதிகாரத்திற்கு எல்லை இருக்க வேண்டும் என்றும் அந்த எல்லையை வகுக்க வேண்டும் என்றும், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments