ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக, தம்பர அமில தேரரால் தாக்கல் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் ஜனவரி மாதம் ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கிவிட்டு, அந்தப் பதவிக்கு குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவை நியமித்தார்.
இந்த நடவடிக்கைக்கு எதிராகவே, சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் முக்கியஸ்தரான கலாநிதி தம்பரே அமில தேரரால், இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்சவை அகற்றி, மைத்ரிபால சிறிசேனவை ஆட்சிபீடம் ஏற்றுவதற்கு முன்னின்று உழைத்த முக்கிய தலைமை பௌத்த பிக்குகளில் ஒருவரான, தம்ரே அமில தேரர், மஹிந்த ராஜபக்ச ஸ்ரீலங்காவின் பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக கடந்த நவம்பர் மாதம் 28ஆம் திகதி, இந்த மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியதோடு, மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தமை, தொடர்பில் ஸ்ரீலங்கா ஜனாhதிபதி மைத்திரிபால சிறிசேனஇ வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்து உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்து இந்த மனுவை அவர் தாக்கல் செய்திருந்தார்.
ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் இந்த உத்தரவு அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என நீதிமன்ற தீர்ப்பு வெளியாகும்வரை, மஹிந்த ராஜபக்ச பிரதமராக செயற்படவும் அவரது அமைச்சரவையில் உள்ளவர்கள், அமைச்சர்களாக பணியாற்றவும் இடைக்கால தடை விதிக்குமாறும் அவர் அந்த மனுவில் கோரியிருந்தார்.
இந்நிலையில், இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம் எதிர்வரும் ஜனவரி மாதம் 7ஆம் திகதி வரை வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து தேசிய அரசாங்கமொன்றை அமைத்திருந்த சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஒக்டோபர் 26 ஆம் திகதி தேசிய அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அதிரடியாக நீக்கியதுடன்இ அவரை படுகொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாக கூறிவந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அழைத்து பிரதமராக நியமித்திருந்தார்.
ஜனாதிபதியின் இந்த நடவடிக்கைகள் உள்நாட்டிலும்இ சர்வதேச அரங்கிலும் கடும் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில்இ எதிர்கட்சிகளான ஐக்கிய தேசிய முன்னணிஇ ஜே.வி.பிஇ தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் இணைந்து மைத்ரி நியமித்த மஹிந்த மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக நவம்பர் 14 மற்றும் 16 ஆம் திகதிகளில் நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை நிறைவேற்றியிருந்தது.
எனினும் இதற்கு இணங்காத ஜனாதிபதி மைத்ரிஇ நாடாளுமன்றில் அங்கம் ரணிலை பிரதமராக நியமிக்கப்போவதில்லை என தொடர்;ச்சியாக கூறி வருகின்றார்.
சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரியின் இந்த அறிவிப்புக்கள் தொடர்பில் கடும் கண்டனத்தை வெளியிட்டிருந்த, தம்பரே அமில தேரர், ஜனாதிபதியின் அதிரடி தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையில் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
நாட்டின் அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் முழுமையாக ஓரங்கட்டிவிட்டு சர்வாதிகாரியாக செயற்பட்டுவரும் சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவிற்கு லிபிய அதிபர் கடாபிக்கு ஏற்பட்ட துர்பபாக்கியமான நிலமையே ஏற்படும் எனவும் தம்ரே அமில தேரர் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.a
0 Comments