Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கொழும்பில் பதற்றம்; ஐவர்மீது பயங்கரச் சூடு!

கொழும்பு – மட்டக்குளி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐவர் காயமடைந்த நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
மோட்டார்சைக்கிளில் வந்த இருவர் முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த சிலர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொழும்பு-15, முகத்துவாரத்தில் (மோதர) சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண்ணொருவர் உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே, ஓட்​டோவில் பயணித்துகொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
என்ன காரணத்துக்காக இந்த சூட்டுச் சம்பவம் இடம்பெற்றது என தெரியவரவில்லை ஆயினும் இதுகுறித்த தீவிர விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுவருகின்றனர்.

Post a Comment

0 Comments