Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மைத்திரியை மிரளவைக்கும் ஐ.தே.கவின் மற்றுமொரு செயற்பாடு!

கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக நாடாளுமன்றில் முன்வைக்கப்பட உள்ள யோசனையை பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றிய பின்னர், அதனை ஜனாதிபதியிடம் கையளிக்க உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது தயார் நிலையில் உள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார். கட்சித் தலைவரான ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கை, நாடாளுமன்றத்தில் பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், எதிர்வரும் 12 ஆம் திகதி மீண்டும் ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தி யோசனை ஒன்றை நிறைவேற்ற உள்ளதாகவும் துஷார இந்துனில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த யோசனைக்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியினால் நாடாளுமன்றத்தில் எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ள யோசனை மீதான வாக்கெடுப்பில், தமது வாக்குகளை பயன்படுத்தப்போவதில்லை என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி இடம்பெற்ற சூழ்ச்சிக்கு எதிராகவே தாம் செயற்படுவதாக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். எனவே, தாம் ஒருபோதும் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கவோ அல்லது வேறு ஒருவரை பிரதமராக நியமிக்கவோ ஆதரவளிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments