நாடு முழுவதிலும் நான்காயிரத்து 561 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ள பரீட்சையில் ஆறு இலட்சத்து 56 ஆயிரத்து 641 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். பரீட்சை காலை 8.30 இற்கு ஆரம்பமாகும்.
காலை எட்டு மணியளில் பரீட்சை மத்திய நிலையங்களில் சமூகம் அளிக்க வேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கேட்டுக் கொண்டுள்ளனார். அனுமதி அட்டையில் பரீட்சைக்கான நேர அட்டவனைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை கவனத்தில் கொண்டு பரீட்சைக்கு சமூகமளிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
பரீட்சை அனுமதி அட்டை தேசிய அடையாள அட்டை பென்சில் பேனா தவிர்ந்த வேறு எந்த உபகரணங்களையும் பரீட்சை மத்திய நிலையங்களுக்கு எடுத்து வர அனுமதியில்லை. பரீட்சைக்கு செல்லும்போது ஆள் அடையாள அட்டை மற்றும் அனுமதி அட்டை என்பன முக்கியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று மணித்தியால பரீட்சை வினாத்தாளுக்கு மேலதிகமாக 10 நிமிடம் வாசிப்பு நேரமாக வழங்கப்பட உள்ளதாக பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை பரீட்சை நிலையங்களுக்கு விசேட பாதுகாப்புக்களை வழங்கவுள்ளதாக பொலிஸ' ஊடகப் பேச்சாளரும் அத்தியகட்சருமான ருவான் குணசேகர தெரிவித்தார்.
பரீட்சைகள் நிலையங்களினதும் அதனை சூழவுள்ள பிரதேசங்களினதும் பாதுகாப்பை கருத்திற் கொண்டு பொலிஸ சார்ஜன் ஒருவரையும் கொன்ஸ்டபல் இருவரையும் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும். வினாத்தாள் மற்றும் விடைதாள்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கபொத சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 12ம் திகதி நிறைவடையவுள்ளது.இரத்மலானையிலுள்ள விசேட தேவைகளை கொண்ட கல்லூரியிலும் தங்காலை மாத்தறை சிலாபம் மற்றும் கொழும்பு மெகசீன் சிறைச்சாலையிலும் பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பேராதனை போதனா வைத்தியசாலையிலும் மஹரகம அபெக்ஸ்ஸா வைத்தியசாலையிலும் இரண்டு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
இம்முறை இந்த பரீட்சை மத்திய நிலையங்களுக்கும் மேலதிக மண்டப கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். பரீட்சையின் போது இடம்பெறும் முறைகேடுகளை தடுப்பதே இதன் நோக்கமாகும்.
0 Comments