Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் கடும் மழை வெள்ளம்; மக்கள் பாதிப்பு! (படங்கள் இணைப்பு)

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து அடை மழை பெய்து வருவதனால் மக்களின் இயல்பு வாழ்வில் பாதிப்பு ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல பிரதான வீதிகளை ஊடறுத்து வெள்ள நீர் பாய்ந்து வருவதனால் அவ்வீதியைப் பயன்படுத்தும் மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
பட்டிருப்பு – பெரிபோரதீவு பிரதான வீதி பெரியபோரதீவு பழுகாமம் பிரதான வீதி, வெல்லாவெளி – மண்டூர் பிரதான வீதி, மண்முனை – கொக்கட்டிச்சோலை பிரதான வீதி, மாடிமுன்மாரி – தாந்தாமலை பிரதான வீதி, ஆனைகட்டியவெளி - காக்காச்சுவட்டை பிராhன வீதி, வலையிறவு - வவுணதீவு பிரதான வீதி, மட்டக்களப்பு பிள்ளையாரடி பிரதான வீதி, போன்ற பிரதான வீதிகளை ஊடறுத்து வெள்ளநீர் பாய்ந்து வருவதனால் இவ்வீதிகளில் போக்குவரத்து மார்க்கங்களில் ஈடுபடும் பொதுமக்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்ககொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதனால் தாழ் நிலங்களில் அமைந்துள்ள முனைத்தீவு, பட்டாபுரம், பெரியபோரதிவு, பழுகாமம், உள்ளிட்ட பல கிராமங்களும் நீரில் மூழ்கியுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.
இது இவ்வாறு இருக்க மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை(08) காலை 8.30 மணியிலிருந்து இன்று காலை 8.30 மணிவரையில் மட்டகளப்பின் முக்கிய பிரதேசங்களில் பதிவான மழைவீழ்ச்சிப் பெறுமானத்தை தருகிறோம்.
மட்டக்களப்பு நகர் - 75.3mm
நவகிரி - 44.0mm
தும்பங்கேணி - 79.4mm
மைலம்பாவெளி - 67.2mm
பாசிக்குடாவில் - 85.8mm
உன்னிச்சை - 38.5mm
வாகனேரி - 35.4mm
கட்டுமுறிவு - 13.3mm
உறுகாமம் - 45.5mm
கிரான் - 140.2mm
கதிரவெளி - 19.6mm
குறித்த தகவலை வானிலை அவதான நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட நிலையப் பொறுப்பத்திகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்தார்.













Post a Comment

0 Comments