Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சந்திரிகாவின் அதிரடி; எதிர்பார்ப்புக்கள் வலுக்கின்றன!

சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரனதுங்க, மாதுலுவாவே சோபித தேரர் நினைவு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதுலுவாவே சோபித தேரர் நினைவுக் கூட்டம் தற்போது புதிய நகர மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. சபாநாயகர் கரு ஜயசூரிய உட்பட அரசியல் முக்கியஸ்தர்கள், ராஜதந்திரிகள் பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.
இதேவேளை கடந்த மாதம் 26ஆம் நாளிலிருந்து நாட்டில் ஏற்பட்ட குழப்ப நிலைகளின் பின்னர் சந்திரிகா குமாரனதுங்க இன்றைய தினமே அதிரடியாக பொதுவெளிக்கு வந்துளார்.
கடந்த நல்லாட்சி அரசாங்க உருவாக்கத்தில் சந்திரிகாவின் பங்களிப்பு முக்கியமான ஒன்றாகக் காணப்பட்டதுடன் மறைந்த மாதுலுவாவே சோபித தேரரும் ஆட்சி மாற்றத்துக்கு முன்னின்று உழைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.
எவ்வாறாயினும் பரபரப்பின் மத்தியில் வெளியில் தலைகாட்டியுள்ள சந்திரிகா நடந்துவரும் அரசியற் களத்தில் அதிரடி அறிவிப்புக்கள் ஏதேனும் விடுவார் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

0 Comments