சிறிலங்காவில் நிலவும் ஆட்சிக் குழப்பத்தின் மத்தியில் பிரதமர் தொடர்பான உரிய தீர்மானத்தை நாட்டின் அரசியலமைப்புக்கேற்ப விரைந்து மேற்கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவசர கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளது.
கூட்டமைப்பின் சகல உறுப்பினர்களினதும் கையெழுத்துக்கள் அடங்கிய குறித்த கடிதம் சிறிலங்கா ஜனாதிபதியின் ஜனாதிபதி செயலகத்திற்கு முகவரியிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
குறித்த கடிதத்தில், மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக ஏற்கமுடியாதென்றும் நாடாளுமன்றப் பெரும்பான்மையை நிரூபிக்கக்கூடிய உறுப்பினர் ஒருவர் என ஜனாதிபதி கருதும் ஒருவரை பிரதமராக நியமிக்கும்படியும் கேட்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தினை ஜனாதிபதிக்கு அறியத்தரவுவது தமது கடமை எனவும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
0 Comments