Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மைத்திரியின் அதிரடி நடவடிக்கையும், அமெரிக்காவின் இரங்கலும்!

அரசியல் நெருக்கடி உச்சத்தை அடைந்திருக்கின்ற நிலையில் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு எடுத்த ஸ்ரீலங்கா அரசின் அதிரடி நடவடிக்கை தொடர்பாக அவதானத்துடன் செயற்பட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, அரசியல் நெருக்கடியை மேலும் ஆழமாக்கும் செய்திகளால் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது..
ஜனநாயக கட்டமைப்பின் கீழ் ஸ்ரீலங்காவில்; நீதியான நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூற விரும்புவதாக அமெரிக்கா விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் சொல்லப்பட்டுள்ளது..
இதேபோல் பிரித்தானியாவின் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் மார்க் பீல்ட், ஸ்ரீலங்கா அரசியல் நிலைமை குறித்து ஆழந்த கவலை வெளியிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் பிரகாரம், ஜனநாயக கோட்பாடுகளுக்கு அமைய அனைத்து தரப்பினரும் செயற்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்..
ஸ்ரீலங்காவில் ஸ்திரமற்ற அரசியல் நிலைமை மற்றும் நாடாளுமன்ற கலைப்பு தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள கனடா, இந்த நிலைமை ஜனநாயக கோட்பாடுகளையும் நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூரலை பாதித்து விடக் கூடாதென வலியுறுத்தியுள்ளது..

Post a Comment

0 Comments