Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பாராளுமன்ற கலைப்பு சட்டத்திற்கு விரோதமானது : உயர் நீதிமன்றம் செல்லும் ஐ.தே.க


ஜனாதிபதி தனக்கு இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தி சட்ட விரோதமான முறையிலேயே பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

நேற்று நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து அலரிமாளிகையில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி அந்த தீர்மானத்தையும் , தேர்தலையும் இரத்துச் செய்யும் நிலைமை ஏற்படக் கூடுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் திங்கட்கிழமை இந்த தீர்மானத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்திற்கு செல்வதற்கும் ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது. -(3)

Post a Comment

0 Comments