Home » » மீண்டும் அதிரப்போகும் கொழும்பு அரசியல்; பிரதம நீதியரசரின் திடீர் நடவடிக்கை!

மீண்டும் அதிரப்போகும் கொழும்பு அரசியல்; பிரதம நீதியரசரின் திடீர் நடவடிக்கை!

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு புதிய ஆயம் ஒன்றை பிரதம நீதியரசர் நளின் பெரேரா நியமித்துள்ளார்.

தான் உட்பட உயர் நீதிமன்றத்தில் அங்கம்வகிக்கும் ஏழு நீதியரசர்கள் கொண்ட ஆயம் ஒன்றினையே பிரதம நீதியரசர் நியமித்துள்ளார்.

இதன்படி இந்த ஆயம் ஒன்றுகூடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நாடாளுமன்றக் கலைப்பு தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு அதுகுறித்த இறுதித் தீர்மானத்தை வழங்கும் என கூறப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த ஒன்பதாம் நாள் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை விடுத்த மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றைக் கலைத்து எதிர்வரும் ஜனவரி மாதம் தேர்தல் நடத்தப்படும் என அறிவித்திருந்தார்.

அவரது அறிவிப்பை எதிர்த்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புக்கள் என பலதரப்பும் உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்தன.

இந்த மனு மீதான விசாரணையை மேற்கொள்வதற்காக பிரதம நிதியரசர் உள்ளிட்ட மூன்று நீதியரசர்கள் கொண்ட ஆயம் அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

வழக்குத் தொடுநர் தரப்பும் எதிர்த்தரப்பினரும் தமது வாதங்களை முன்வைத்திருந்த நிலையில் ஜனாதிபதியின் நாடாளுமன்றக் கலைப்புக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில் மீண்டும் நாடாளுமன்றம் குட்டப்பட்டு பல்வேறுபட்ட குழப்பங்கள் நிலவிவரும் மத்தியிலேயே பிரதம நிதியரசர் குறித்த மனுகள் மீதான விசாரணைக்காக ஏழு நீதியரசர்கள் கொண்ட ஆயத்தினை அமைத்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |