Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இன்று நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னர் சபாநாயகர் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை!

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று பிற்பகல் கூடவுள்ள நிலையில் சபா நாயகர் கரு ஜெயசூரிய, கட்சித் தலைவர்களை 12 மணிக்கு சந்திப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குழப்பங்களின் மத்தியில் நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறுவதாகக் கூறப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்துக் கட்சிகளின் மாநாடு ஒன்றை மேற்கொண்டிருந்தார். அந்த சந்திப்பின்போது எவ்வித முடிவுகளும் எட்டப்படாமல் கூட்டம் நிறைவுற்றது.
இந்த நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன்படி இன்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்குமூலம் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்

Post a Comment

0 Comments