Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பிரதமரின் செலவுகளை இடை நிறுத்தும் ஐ.தே.கவின் பிரேரணை தொடர்பாக மகிந்த அணி முக்கிய தீர்மானம்


பிரதமரின் செலவீனங்களை இடைநிறுத்தும் வகையில் ஐக்கிய தேசிய கட்சியினர் கொண்டு வந்துள்ள பிரேரணை சட்ட விரோதமானது என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியினர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர்.

நேற்று மாலை ஜனாதிபதிக்கும் ஆளும் தரப்பு எம்.பிக்களுக்கும் இடையே நடத்தப்பட்ட சந்திப்பின் போதே அவர்கள் ஜனாதிபதிக்கு இவ்வாறு அறிவித்துள்ளனர்.

அரசாங்கம் மற்றும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து பிரதர் என யாரும் கிடையாது என சபாநாயகர் அறிவித்துள்ள நிலையில் பிரதமர் அரச நிதியை செலவிடுவது சட்டவிரோதமானது எனவும் இதனால் அவருக்கான செலவீனங்களை இடை நிறுத்துமாறு கோரி நேற்றைய தினம் ஐக்கிய தேசிய கட்சியினரால் பிரேரணையொன்று கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த பிரேரணை மீதான விவாதத்தை எதிர்வரும் 29ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை ஜனாதிபதியை சந்தித்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எம்.பிக்கள் அந்த பிரேரணையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அது சட்டத்திற்கு விரோதமானது எனவும் இதனால் இது தொடர்பாக சபாநாயகருக்கும் மற்றும் எதிர்க்கட்சிக்கும் அறிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. -(3)

Post a Comment

0 Comments