Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதியைச் சந்தித்தது உண்மை! - ராஜித சேனாரட்ண

ஜனாதிபதி விடுத்த அழைப்பின் பேரில் அவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்ததாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் செய்தியொன்றை ரணில் விக்கிரமசிங்கவிற்கு தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் அவரை சந்தித்தேன். நான் தனியாக செல்ல விரும்பாததால் ஜோன் அமரதுங்கவை அழைத்துச்சென்றேன். ஜனாதிபதி தான் ஏன் மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிப்பதற்கு தீர்மானித்தார் என்பதை எனக்கு தெளிவுபடுத்தினார், சிறிசேனவின் நடவடிக்கைகள் நாட்டிற்கு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என்பதை நான் அவரிற்கு தெரிவித்தேன். இதன் பின்னர் நான் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து இந்த சந்திப்பு குறித்த விடயங்களை தெரிவித்தேன்,ஜனாதிபதியுடனான எனது சந்திப்பு நாட்டை பொறுத்தவரை சாதகமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதியுடனான எனது சந்திப்பு சாதகமானதாக அமைந்தது. எனினும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்கள் எப்படி நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். எனது சந்திப்பு கட்சி தாவலுடன் தொடர்பற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments