Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மீண்டும் அரசாங்கத்தை அமைப்போம் : ஐ.தே.மு


அடுத்த வாரத்திற்குள் ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கத்தை அமைப்போம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் சிலர் எங்களுடன் இணைவதற்கு விருப்பத்துடன் இருக்கின்றனர். அவர்கள் அமைதியாக இருக்கின்றனர். தற்போது அரசாங்கம் என கூறிக்கொண்டிருப்போருக்கு இறுதியில் எஞ்சப் போவது 85 பேரே ஆகும். இதனால் மீண்டும் அரசாங்கத்தை அமைப்போம். ஐக்கிய தேசிய முன்ணணியுடன் இணைந்த கூட்டு அரசாங்கமாக இது அமையும். என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று மாலை ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளதுடன் இதன்போது தமது அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)

Post a Comment

0 Comments