தற்பொது நாட்டில் நடைபெறுகின்ற அரசியல் தழும்பல் நிலையை இரண்டு நாட்களில் தீர்த்து வைப்பதாக சிறிலங்காவின் அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஐ.தே.கட்சி மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை இன்று சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சிறிலங்கா ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்சவிற்கும் அவரது அமைச்சரவைக்கும் எதிராக நேற்றைய தினம் ஜே.வி.பி யினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டிருந்தது.
எனினும் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் குழறுபடிகள் இருப்பதாக கூறி மஹிந்தவும் அவரது விசுவாசிகளும் நிராகரித்திருந்த நிலையில் அவரை பிரதமராக நியமித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் நேற்றைய தினம் இரவு நிராகரித்து கடிதமொன்றை சபாநாயகருக்கு அனுப்பி வைத்திருந்தார்.
மிகவும்கடும் தொணியிலான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி அனுப்பியிருந்த இந்தக் கடிதத்தில் பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கும்இ அவரை நீக்குவதற்கும் தன்கே அரசியல் சாசனத்தின் படி அதிகாரம் இருப்பதாக கூறியிருந்த மைத்ரிஇ தனது இந்தத் தீர்மானத்தை கேள்விக்குட்படுத்த முடியாது என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.
மைத்ரியின் இந்தக் கடிதத்தால் கடும் ஆத்திரமடைந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு அளித்த கட்சிகள் இன்று காலை இடம்பெறவிருந்த ஜனாதிபதியுடனான சந்திப்பையும் பகிஷகரித்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று நாடாளுமன்றில் மைத்ரி - மஹிந்த தரப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே இடம்பெற்ற கைகலப்புக்களை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட மஹிந்தவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்புஇ ஜே.வி.பி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பங்காளிக் கட்சிகளாக இருக்கும் ஜாதிக்க ஹெல உறுமயஇ தமிழ் முறபோக்கு முன்னணிஇ சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ்இ அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்திப்பதற்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதற்கமைய இன்றைய தினம் கொழும்பு காலி முகத்திடலுக்கு எதிரிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி குறித்த கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவும் இணைந்துகொண்டிருந்தார்.
இதற்கமைய இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இன்னும் இரண்டே நாட்களில் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவைக் காண இருப்பதாக அரச தலைவர் தெரிவித்துள்ளார்.
வேளிநாட்டு ராஜதந்திரகளின் கடுமையான அழுத்தம் காரணமாகவே மைத்திரி இந்த முடிவை நோக்கி வந்துள்ளதாக அரசியல கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 Comments