Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

நாளை மீண்டும் வாக்கெடுப்பு :பெரும்பான்மை பெறும் கட்சி ஆட்சியமைக்கும்


அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்த கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையே இன்று மாலை விசேட சந்திப்பொன்று நடத்தப்பட்டது.

இதன்போது இன்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாகவும் மற்றும் நாளைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இவ்வேளையில் நாளைய தினத்தில் பாராளுமன்றத்தில் மீண்டும் வாக்கெடுப்பை நடத்துவதற்கும் அதன்போது பெரும்பான்மையை காட்டும் கட்சிக்கு அரசாங்கத்தை அமைப்பதற்கான வாய்ப்பை வழங்குவதற்கும் ஜனாதிபதி இதன்போது இணங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும் மீண்டும் தான் பாராளுமன்றத்தை ஒத்தி வைக்க நடவடிக்கையெடுக்க மாட்டேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. -(3)

Post a Comment

0 Comments