Home » » மஹிந்த அணியால் நாடாளுமன்றம் முடக்கம் : அக்ராசனத்தை கைப்பற்றிய ஆளும் கட்சி - நேரலை

மஹிந்த அணியால் நாடாளுமன்றம் முடக்கம் : அக்ராசனத்தை கைப்பற்றிய ஆளும் கட்சி - நேரலை

சபாநாயகர் கரு ஜயசூரியவை விலக்குமாறு வலியுறுத்தி தற்சமயம் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் பெயர்கூறி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையிலேயே இவ்வாறு மஹிந்த அணி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சபாநாயகரது ஆசனத்தில் மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்ணான்டோ அமர்ந்திருக்கின்றார்.
இதன் காரணமாக சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே முடங்கியிருக்கிறது.
நேரலை உதவி UNP
இணைப்பு 01
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் தீர்வுகள் இன்றி நீடிக்கும் நிலையில், இன்று மீண்டும் நாடாளுமன்றம் கூடியுள்ளது.
இன்றைய அமர்வுக்கான நிகழ்ச்சி நிரல் குறித்து கலந்துரையாடுவதற்காக இன்று காலை கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.
எனினும் இன்றைய நிகழ்ச்சி நிரல் குறித்து கட்சித் தலைவர்களுக்கு இடையில் இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லை.
இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற அமர்வுகள் 1.30 மணிக்கு ஆரம்பமாக இருந்த போதிலும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரின் ஆசனத்தை சூழ்ந்து எதிர்ப்பை வெளியிட்டுவருகின்றனர்.
ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அனுந்திக்க பெர்ணாண்டோ சபாநாயகரின் ஆசனத்தை ஆக்கிரமித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |