எம்.ஐ.எம்.அஸ்ஹர் , யு.கே.காலித்தீன்)
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திசபை ஒழுங்கு செய்திருந்த வைத்தியசாலை அபிவிருத்தியில் கைகொடுத்த முதுசங்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை வைத்தியசாலை கேட்போர்கூடத்தில் வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டொக்டர் திருமதி .கரீமா சனூஸ் தலைமையில் இடம்பெற்றது.
வைத்தியசாலை அபிவிருத்திசபை பிரதி செயலாளர் எம்.எம்.உதுமாலெவ்வையின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் வைத்தியசாலை சிரேஸ்ட வைத்தியர் டொக்டர் சனூஸ் காரியப்பர் , சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் பேஸ் இமாம் ஏ.ஆதம்பாவா மௌலவி , உலமாசபைத் தலைவர் மௌலவி எம்.சலீம் ( ஸர்கி), ஓய்வுபெற்ற அதிபர் ஐ.எல்.ஏ.மஜீட் ,வைத்தியசாலை அபிவிருத்திசபை பொது செயலாளர் விரிவுரையாளர் எம்.ஐ.எம்.சதாத் ,மாளிகைக்காடு சாலிஹீன் ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் எம்.ஜெமீல் , கல்முனை மாநகரசபையின் சாய்ந்தமருது பிரதேச உறுப்பினர்கள் எம்.ஏ.றபீக், எம்.ஐ.ஏ.அஸீஸ் , எம்.வை.ஜெவ்பர் , ஏ.ஆர்.எம்.அஸீம் , காரைதீவு பிரதேச சபை சுயேட்சைக்குழு உறுப்பினர் ஏ.ஆர்.எம்.பஸ்மீர் உள்ளிட்ட வைத்தியசாலை அபிவிருத்திகுழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
சாய்ந்தமருது லீடர் அஸ்றப் வித்தியாலய பிரதி அதிபர் எம்.ஏ.நிஸார் வைத்தியசாலையின் பெண்கள் விடுத்திக்கு பெறுமதியானதொரு சுவர்க் கடிகாரத்தை அன்பளிப்பு செய்தததுடன் வைத்தியசாலையின் துரித அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்த அறுபது பேர் அதிதிகளினால் அன்பளிப்பு வழங்கி அவர்களை கௌரவிக்கப்பட்டனர்.
0 Comments