பாராளுமன்றம் கலைக்கப்பட்ட செய்தி அறிவிக்கப்பட்டதும் சாய்ந்தமருது , மாளிகைக்காடு பிரதேசத்தில் இரண்டு மணித்தியாலயங்களுக்கு அதிகமான நேரம் பட்டாசு கொழுத்தி இளைஞர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
சாய்ந்தமருது பிரதேசத்தில் கடந்த ஒரு வருடகாலமாக சாய்ந்தமருதிற்கென தனியான நகரசபையை பிரகடனப்படுத்துமாறு அப்பிரதேச மக்கள் அரசாங்கத்தை வலியுறுத்தி வந்தும் சில அரசியல் தலைமைகளினால் தொடர்ச்சியாக அம்மக்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வருவதனால் கடந்த உள்ளுராட்சிசபைத் தேர்தலின் போது சாய்ந்தமருது மக்கள் அனைவரும் ஒற்றுமைப்பட்டு சுயேட்சை குழுவொன்றை அரசியல் கட்சிகளுக்கெதிராக களம் இறக்கி கல்முனை மாநகரசபையில் 9 உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்டனர். நடைபெறப்போகும் பொதுத் தேர்தலில் சாய்ந்தமருதிற்கான தனியான நகரசபையை வென்றெடுப்பதற்கான சரியான வியுகம் ஒன்றினை சாய்ந்தமருது மக்கள் வகுக்க திட்டமிட்டுள்ளனர் என தெரிய வருகின்றது.
0 Comments