Advertisement

Responsive Advertisement

நாடாளுமன்றம் கலைப்பு இன்று மாலை தீர்ப்பு


நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இதுவரை 11 மனுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆகியன இணைந்து குறித்த மனுக்களை தாக்கல் செய்து வருவதாக அங்கிருக்கும் எமது ஆதவன் செய்தியாளர் தெரிவித்தார்.அத்தோடு, உச்ச நீதிமன்ற வளாகத்தில் ஐ.தே.க.வின் பெருமளவான ஆதரவாளர்கள் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலிக்க, உச்ச நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் தீர்மானித்துள்ளது.மொத்தம் இதுவரை 11 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு, அவற்றை அவசர மனுக்களாக எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில், இவ்வழக்கு விசாரணை தொடர்பான தீர்ப்பு இன்று மாலை வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது.(15)

Post a Comment

0 Comments