யாழ் பல்கலைக்கழக அனைத்து பீட பரீட்சைகள் மத்தியிலும் பல்கலை மாணவர்கள் வெள்ள அனர்த்த்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களிற்கு உதவிகளை வழங்கியுள்ளனர்.குறித்த நிவாரணப்பொருட்களில் நூடுல்ஸ் பிஸ்கட் சீனி தேயிலை பால்மா கச்சான் பிஸ்கட் கல்பணிஸ் மெழுகுவர்த்தி தீப்பெட்டி சவர்க்காரம் கைக்குழந்தைகளுக்கான ஆடைகள்மேலும் பல அத்தியாவசிய பொருள்களும் உள்ளடங்குகின்றன.
குறித்த நிவாரணப்பொருட்களை யாழ் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றியத் தலைவர் கிருஷ்ணராஜா கிருஷ்ணமீனன் தலைமையில் சென்ற யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழை காரணமான ஏற்பட்ட வெள்ளத்தினால் தமது வீடுகளில் இருந்து வெளியேறி தற்காலிகமாக தங்கியிருந்த அம்மக்களுக்கு வழங்கி வைத்தனர்.
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஊடாக கிழக்கிற்கான வெள்ள நிவாரண உதவிப் பொருள்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கிழக்கிற்கான உறவுப்பாலம் எனும் தொனிப்பொருளில் மழை வெள்ளத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களுக்கு யாழ் மாவட்டம் உள்ளடங்களாக நடமாடும் சேவையில் சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்கள் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன் வழங்கி வைத்துள்ளனர்.
இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராமங்களுக்கு சென்று வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களுக்கு உதவிப்பொருட்களை வழங்கி வைத்தனர்.(15)
0 Comments