இலங்கையின் மீயுயர் நிதிமன்றம் எனப்படும் உச்சநீதிமன்றத்தின் வளாகம் வளாகம் தற்பொழுதுவரை பரபரப்பாகவே உள்ளது.
சிறிலங்கா அரச தலைவரால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக 17 மனுக்கள் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
இதில் தேர்தல்கள் திணைக்களத்தில் இருந்தும் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு பின்னர் விசாரணை இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அதுதொடர்பான தீவிர விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைக்குமாக இருந்தால் 14 ஆம் திகதி பாராளுமன்றம் கூட்டப்படும் நிலை உள்ளதுடன் மைத்திரி தனது உத்தரவை திரும்பப் பெறகூடிய சாத்தியக்கூறுகளும் காணப்படுகின்றன.
எவ்வாறாயினும் இன்று மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நாளை அல்லது பிறிதொரு நாளில் தீர்ப்பு வழங்கப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது. எதுவாயினும் இன்னும் சற்று நேரத்தில்தான் முடிவை அறியமுடியும்.
0 comments: