Advertisement

Responsive Advertisement

சந்திரிகா சூளுரை!

யார் விலகினாலும் நான் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு விசுவாசமானவர்களுடன் இணைந்து கட்சியை மீள கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்று சூளுரைத்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க.
தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுடன் இணைவதன் மூலம், 2015 ஜனவரி 8 இல் வெளிப்படுத்தப்பட்ட மக்களின் அபிலாசைகளிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிலர் துரோகம் செய்கின்றனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியை அழிப்பதற்கு சிலர் முயல்கின்றனர். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஏனைய பல கட்சிகள் குழுக்களுடன் இணைந்து நல்லாட்சியை கொண்டுவருவதற்கான யுத்தத்தில் வெற்றிபெற்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொள்வதன் மூலம் சிலர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அழிக்க முயல்கின்றனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து யார் விலகினாலும் நான் விலகமாட்டேன். நான் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு விசுவாசமானவர்களுடன் இணைந்து கட்சியை மீள கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments