Advertisement

Responsive Advertisement

கிழக்கில் தமிழர்கள் வாழவில்லையா?



இம்முறை தீபாவளி பண்டிகைக்கான விடுமுறையினை வடக்கிற்கும், மலையகத்திற்கும் வழங்கியிருப்பதுடன் கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது இங்குவாழும் சைவமக்களிடையே விசனத்தை ஏற்படுத்தியள்ளது. கிழக்கில் தமிழர்கள் பல்வேறு வழிகளிலும் புறக்கணிக்கப்பட்டுவதையிட்டு நாம் அதிருப்தியடைந்துள்ளோம் என இந்துப்பிரசாரகர் செ.துஜியந்தன் தெரிவித்துள்ளார்.
தீபாவளிக்கான விசேடவிடுமுறையாக பாடசாலை மாணவர்களுக்கு வடக்கு மாகாணத்திற்கும், ஊவாமாகாணத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. இந் நிலையில் கிழக்கிலுள்ள தமிழ் பாடசாலைகளுக்கு இவ் விடுமுறை வழங்கப்படாமையினால் இங்குள்ள சைவர்கள்; மிகுந்தகவலையடைந்துள்ளனர். அது தொடர்பில் கருத்து தெரிவித்த சைவப்பிரசாரகர் அகரம் செ.துஜியந்தன்...
கிழக்கில் வாழும் தமிழர்கள் சகல வழிகளிலும் அரசினால் புறக்கணிக்கப்பட்டுவருகின்றனர். இம் மக்கள் தெரிவு செய்து அனுப்பிய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட இச் சாதாரண விடயத்தைக்கூட தட்டிக்கேட்டு ஒரு விசேட விடுமுறையைத்தானும் பெற்றுக்கொடுக்க முடியாதவர்களாகவுள்ளனர். திபாவளி பண்டிகையை இந்துக்கள் அனைவருமே கொண்டாடுகின்றனர். வடக்கிலும், மலையகத்திலும் வாழுபவர்கள் மட்டுமா தீபாவளியை கொண்டாடுகின்றனர். ஏன் கிழக்கில் தமிழ் மக்கள் கொண்டாடுவதில்லையா?
இந்நாட்டில் வாழ்பவர்களில் வடக்கிற்கு ஒரு நீதி, மலையகத்திற்கு ஒரு நீதி, கிழக்கிற்கு ஒரு நீதி என பிரித்து பிரிவினையை ஏற்படுத்துபவர்கள் மக்களல்ல. அரசும் அதிகரிகளுமேயாகும். கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் புறக்கணிப்புக்குள்ளாக்கப்படுவதை தமிழ் அரசியல் தலைமைகளும் கண்டும் காணாமல் இருப்பது வேதனையளிக்கின்றது  என்றார்

Post a Comment

0 Comments