Advertisement

Responsive Advertisement

இடைக்கால கணக்கு அறிக்கை (வரவு -செலவு) அடுத்த வாரத்தில்


நிதி அமைச்சினால் அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்திற்கு பதிலான இடைக்கால கணக்கு அறிக்கை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த அறிக்கை அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டு அதன் அனுமதியுடன் அடுத்த வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவும் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டம் தாமதிக்கும் பட்சத்தில் ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கான சம்பளம் வழங்குவதில் பெரும் நெருக்கடி நிலைமை ஏற்படக் கூடுமென தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. -(3)

Post a Comment

0 Comments