Advertisement

Responsive Advertisement

மஹிந்த-மைத்திரிக்கு எதிராக இன்று களத்தில் இறங்குகிறார் முக்கிய தேரர்!

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரின், அரசியல் சதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பர அமில தேரர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளார்.
கொழும்பில் உள்ள விகாரமாதேவி பூங்காவுக்கு அருகில் உள்ள புத்தர் சிலைக்கு எதிரே, இன்றைய தினம் தம்பர அமில தேரர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
ஸ்ரீலங்காவில் கடந்த 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ரணில் - மைத்திரி தலைமையிலான நல்லாட்சி கடந்த 26ஆம் திகதி ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
அத்துடன், முன்னாள் ஆட்சியாளர் மஹிந்த ராஸபக்ஷவை மைத்திரி - மஹிந்த அரசாங்கத்தின் பிரதமராக அறிவித்து பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக கடந்த வாரம் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் இரண்டு முறை நம்பிக்கையில்லா பிரேரணை குரல் வழியான வாக்கெடுப்பு ஊடாக வெற்றிப்பெற்றதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
எனினும், அதனை ஏற்றுக்கொள்ளாத மஹிந்த தரப்பினர் நாடாளுமன்றத்தில் கடந்தவாரம் பாரிய குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தார்கள். அத்துடன் ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவும் ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மையை நிரூபித்ததாக ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றம் கூடவுள்ளது.
நாட்டில் தற்போது பிரதமர் மற்றும் அமைச்சரவை இல்லை என்றும் நாடாளுமன்றில் பெரும்பான்மை உள்ள தமக்கு அரசாங்கத்தை அமைக்க வழிவிடுமாறு ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
இவ்வாறான சூழ்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தம் கொடுத்து இன்று ம் பிற்கல் 3 மணிக் கொழும்புவிகாரமகாதேவி பூங்காவில் சத்தியாகிரக போராட்டமொன்று இடம்பெறவுள்ளது.
கட்சி பேதமின்றி அனைவரையும்இணைத்துக்கொண்டு சத்தியாகிரக போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இந்த போராட்த்திற்கும் ஜனாதிபதியிடமிருந்து உரிய பதில் கிடைக்காவிட்டால் சாகும்வரையிலான உணவுத் தவிர்ப்புப்போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அதன் ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜீத் பீ.பெரேரா நேற்று தெரிவித்திருந்தார்.
இந்த போராட்டத்தை ஜனநாயகத்துக்காக போராடும் சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன
முன்னதாக கடந்த சனிக்கிழமை தம்பர அமில தேரரினால் முன்னெடுக்கப்படவிருந்த சத்தியாக்கிரகப் போராட்டம் பிற்போடப்பட்டிருந்தது.
தம்பர அமில தேரர் கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இவ்வாறு சத்தியாக்கிரப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்திருந்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென வலியுறுத்தியே அவர் இவ்வாறு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்திருந்தார்.
எனினும் குறித்த போராட்டம் பிற்போடப்பட்ட நிலையில், இன்றைய தினம் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments