தெரிவுக் குழுவுக்கு உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியினருக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினருக்கும் இடையே கடும் முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
தற்போது நாங்களே ஆளும் கட்சியாக இருப்பதாக கூறி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 உறுப்பினர்களை நியமித்துள்ளது. இந்நிலையில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் எங்களுக்கே இருக்கின்றது இதனால் எங்கள் தரப்பிலிருந்தே அதிகமான உறுப்பினர்களை நியமிக்க முடியுமென ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் தெரிவுக் குழுவுக்குறிய 12 உறுப்பினர்களில் 7 உறுப்பினர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு அது தொடர்பான பட்டியலை பாராளுமன்ற செயலாளருக்கு அனுப்பி வைக்க மகிந்த அணி நடவடிக்கையெடுத்துள்ளது. எவ்வாறாயினும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சி இது தொடர்பாக போராடவுள்ளது.
இவ்வாறான நிலைமையில் பாராளுமன்றம் நாளை காலை 10 மணிக்கு கூடும் போது இரண்டு தரப்பினருக்கும் இடையே இது தொடர்பாக கடும் சர்ச்சை ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)

0 Comments