பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் புதிய அமைச்சரவை நியமனம் சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு கோரி ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளினால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு எதிர்வரும் 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருப்பதற்கு சட்டரீதியான உரிமை இல்லை எனவும் அவருடைய பதவியை ரத்து செய்யக் கோரியும் 122 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துடன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த மனு மீதான விசாரணை 30ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
எனினும், ஜனாதிபதியின் செயற்பாடு அரசியலமைப்பிற்கு முரணானதென்றும், மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருப்பதற்கு சட்டரீதியான உரிமை இல்லை எனவும் குறிப்பிட்டு, அவருடைய பதவியை ரத்து செய்யக் கோரியும் மற்றும் புதிய அமைச்சரவை சட்டவிரோதமானது எனவும் அதனையும் இரத்துச் செய்யக் கோரியும் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. -(3)

0 Comments