Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

28 வருடங்களுக்கு பிறகு மன்னார் நகர நுழைவாயிலிருந்து வெளியேறியது இராணுவம்


சுமார் 28 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த மன்னார் கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான கட்டத்திலிருந்து இன்று(திங்கட்கிழமை) காலை இராணுவம் முழுமையாக வெளியேறியுள்ளது.இதன் போது மன்னார் தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவு அதிகாரி குறித்த கட்டிடத்திற்கு வருகை தந்து மன்னார் மாவட்ட கூட்டுறவுச் சபையின் உப தலைவர் ஜஸ்ரின் சொய்சா உள்ளிட்ட குழுவினரிடம் குறித்த கட்டிடத்திற்கான ஆவணங்களை வைபவ ரீதியாக கையளித்தார்.கட்டிடத்தை பொறுப்பேற்றுக் கொண்ட மன்னார் மாவட்ட கூட்டுறவுச் சபை மேலதிக பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.
குறித்த கட்டடம் இராணுவத்தினரால் மன்னார் பிரதேசச் செயலகத்திடம் கையளிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் 29 ஆம் திகதி மன்னார் நகர உதவி பிரதேச செயலாளர் சிவசம்பு கணகாம்பிகையினால் கூட்டுறவு திணைக்கள அதிகாரியிடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டது.
எனினும் குறித்த கட்டடத்திலிருந்த இராணுவம் முழுமையாக வெளியேறவில்லை. அத்துடன், வெளியேறுவதற்கு இராணுவத்தினர் கால அவகாசம் கோரியிருந்தனர்.இந்த நிலையில் குறித்த கட்டடத்திலிருந்த இராணுவம் இன்று காலை 10 மணியளவில் முழுமையாக வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.(15)DSC_0197 DSC_0198 DSC_0220

Post a Comment

0 Comments