ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தள்ளுபடி செய்யுமாறு சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய நீதியரசர்கள் குழாமிடம் கோரியுள்ளார்.
அதேவேளை, ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவவுக்கு ஆதரவாக 5 மனுக்கள் இன்றைய தினம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கு எதிராக நேற்று தாக்கல் செய்யப்பட்ட13 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை நேற்றைய தினமே உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டிருந்தது.
எனினும் இந்த மனுக்களின் பிரதான பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த சட்டமா அதிபர் தனக்கு பதிலளிப்பதற்கு கால அவகாசம் கோரியதை அடுத்து இன்று முற்பகல் 10.00 மணி வரை தலைமை நீதியரசர் தலைமையிலான மூவர் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் விசாரணைகளை ஒத்திவைத்தது.
ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவித்தலை இடை நிறுத்துமாறு வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் தொடர்பான மனுக்களில் 11 மனுக்கள் தொடர்பான சமர்ப்பணங்களை நீதியரசர்கள் குழாம் நேற்று ஆய்வுக்கு உட்படுத்தியதுடன், ஏனையவை தொடர்பான விசாரணைகளை இன்று வரை ஒத்திவைத்தது.
இந்த நிலையில், மஹிந்த தரப்பு ஆதரவாளர்கள், ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு எடுத்த தீர்மானத்துக்கு ஆதரவ தெரிவித்து 5 மனுக்களை உச்சநீதிமன்றத்தில் இன்று காலை தாக்கல் செய்திருக்கிறார்கள்.
பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜி.எல்.பீரிஸ், அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில உள்ளிட்ட ஐந்துபேர் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இதேவேளை, ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கு எதிராக நேற்று தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணை இன்று காலை உள்ளுர் நேரப்படி 10 மணிக்கு ஆரம்பமானதுடன் தற்போது தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையில் பிரசன்ன ஜயவர்தன, பிரியந்த ஜயவர்தன உள்ளிட்ட 3 நீதியரசர்கள் குழாம் இந்த மனுக்களை விசாரணை செய்து செய்து வருகின்றது.
இதற்கமைய ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கு எதிராக நேற்று தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தள்ளுபடி செய்யுமாறு சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய நீதியரசர்கள் குழாமிடம் கோரியுள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு எடுத்த தீர்மானமானது அரசியல் அமைப்புக்கு உட்பட்டது என்றும் அவர் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, நீதிமன்றத்தில் அமர்வு 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டதுடன் உச்ச நீதிமன்றத்தை அண்டிய பகுதிகளில் பொலிஸார் விசேட பாதுகாப்பில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.
0 Comments