இலங்கையில் எழுந்துள்ள அரசியல் சிக்கல் நிலையின் மத்தியில் சகல அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் அரசாங்கம் கடுமையான எச்சரிக்கையினை விடுத்துள்ளது.
நாட்டின் நலனைக் கருத்திற் கொண்டு பல புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் உள்ளிட்ட அனைத்து அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் அமைதியாகவும், நட்பு ரீதியாகவும் தங்களது கடமைகளை செய்ய வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
இவ்வாறு தங்களது கடமைகளை செய்யும் போது நாட்டின் அபிவிருத்திக்காக தங்களது பங்களிப்பினை அரச ஊழியர்கள் வழங்க வேண்டுமென கோரியுள்ளது.
ஏதேனும், ஓர் சந்தர்ப்பத்தில் ஒழுக்க விதிகளுக்கு முரணாகவோ அல்லது நாச வேலைகளிலோ அரச உத்தியோகத்தர்கள் ஈடுபட்டால், தராதரம் பாராது எந்தவொரு அரச உத்தியோகத்தர்களுக்கு எதிரகாவும் கடுமையாக சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
0 Comments