Advertisement

Responsive Advertisement

எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் நிறுத்தம்! எரிபொருள் நிலையங்களில் வாகனங்கள் வரிசையில்


பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலை நிறுத்தப் போராட்டத்தால் நாடு பூராகவும் தற்போது எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருபதை அவதானிக்க முடிகின்றது.

பெற்றோலிய களஞ்சியசாலையிலிருந்து எரிபொருளை எடுத்துச் செல்லும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அதன் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

பெற்றோலிய வளத்துறை அமைச்சராக இருந்த அர்ஜுன ரணதுங்க நேற்று பெற்றோலிய கூட்டுத்தபானத்திற்கு சென்றிருந்த போது அங்கு ஏற்பட்ட அமைதியின்மையின் போது துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்திருந்தார். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. -(3)

Post a Comment

0 Comments