Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மூடிய அறைக்குள் தனியாக நடத்திய பேச்சு - ரணிலிடம் மோடி கூறியது என்ன?


இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூடிய அறைக்குள் இரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பிற்பகல், இந்திய பிரதமரைச் சந்தித்தார்.
இருதரப்பு பிரதிநிதிகள் குழுக்களும் பேச்சுக்களை நடத்திய பின்னர், மூடிய அறைக்குள் இரு நாட்டுப் பிரதமர்களும் இரகசிய பேச்சுக்களில் ஈடுபட்டனர். இதன்போது முக்கிய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றபோதிலும், அது தொடர்பான தகவல்கள் இதுவரையில் வெளியாகவில்லை. நேற்றைய சந்திப்பின் பின்னர் ரணில் அல்லது மோடி இருவரும் ஊடகவியலாளர்களுக்கு எந்தக் கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments