Home » » கல்முனை ஸாஹிராவில் சர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி தமக்கு கற்பித்த ஆசிரியர்களைபழைய மாணவர்கள் வீடு தேடிச் சென்று அவர்களை பாடசாலைக்கு அழைத்து வந்து பாராட்டிகௌரவிப்பு

கல்முனை ஸாஹிராவில் சர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி தமக்கு கற்பித்த ஆசிரியர்களைபழைய மாணவர்கள் வீடு தேடிச் சென்று அவர்களை பாடசாலைக்கு அழைத்து வந்து பாராட்டிகௌரவிப்பு



( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
சர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி தமக்கு கற்பித்த ஆசிரியர்களை வீடு தேடிச் சென்றுஅவர்களை பாடசாலைக்கு அழைத்து வந்து மருத்துவ முகாமொன்றை ஏற்படுத்தி மருத்துவபரிசோதனை செய்து உணவுட்டி ,உபசரித்து ,பாராட்டி ,பரிசில்கள் வழங்கி மீண்டும் அவர்களைதத்தமது வீ்ட்டுக்கு அழைத்துச் சென்ற சம்பவமொன்று கடந்த ஞாயிற்றுக் கிழமை கல்முனைஸாஹிரா தேசியக்கல்லூரியில் இட

ம்பெற்றது.
 கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில்  1990 ஆம் ஆண்டு உயர்தரம் கற்ற பழையமாணவர்கள் ஒன்றிணைந்து இவ்வருட ஆசிரியர் தின நிகழ்வினை வித்தியாசமான முறையில்செய்து காட்டியுள்ளனர்.
 ஸஹிரியன் 90 உயர்தர மாணவர்கள் அமைப்பின் செயலாளர் தபாலதிபர் யூ.எல்.எம்.பைசரின்நெறிப்படுத்தலில் கல்முனை அஸ்றப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் கண் சத்திர சிகிச்சைநிபுணர் டொக்டர் எம்.எம்.அல் அமீன் றிஸாத்  தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்குமாகாண கல்விப்பாளர் எம்.கே.எம்.மன்சூர்ஸாஹிராக் கல்லூரியின் அதிபர் எஸ்.முஹம்மட்ஸாஹிராக் கல்லூரியின் முன்னாள் அதிபர்களான சட்டத்தரணி எம்.சீ.ஆதம்பாவா.எம்.ஹூசைன் , .பீர்முஹம்மது , எம்.எம்.இஸ்மாயில் உள்ளிட்ட ஸஹிரியன் 90 உயர்தரமாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அத்துடன் இவர்களுக்கு கற்பித்த தற்போது மரணித்துள்ள  ஆசிரியர்களுக்காக துஆப்பிரார்த்தனையும் இடம்பெற்றது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |