நாட்டில் 50,000 ரூபா நாணயத்தாள்கள் இல்லாத நிலையில் இவ்வாறாக அந்த நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டமை பொலிஸாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில், 5,000 ரூபா மாத்திரமே, மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டு புழக்கத்தில் உள்ள அதிக பெறுமதி கொண்ட நாணயத்தாள் ஆகும். ஆனால் தற்போது புழக்கத்தில் உள்ள 5,000 ரூபா நாணயத் தாளின் வடிவமைப்பில், 50,000 ரூபா என அச்சிடப்பட்ட போலி நாணயத் தாள்களே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்தப் போலி நாணயத் தாள்களை அச்சிடும் போது தவறுதலாக ஒரு 0 மேலதிகமாக அச்சிடப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த போலி நாணயத் தாள்கள் தொடர்பாக, வணிகர் ஒருவரையும், தனியார் கல்வி நிறுவன ஆசிரியர் ஒருவரையும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். -(3)
0 comments: