Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பகிடிவதையால் 2000 பேர் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற்றம் : 14 பேர் தற்கொலை


பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகள் காரணமாக இதுவரை 2000 பேர் வரையிலான மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியை கைவிட்டு சென்றுள்ளதாக தெரிவித்துள்ள உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ பகிடிவதையென்ற பெயரில் நடத்தப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் கொடுமைகள் காரணமாக இது வரை 14 மாணவர்கள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சில பல்கலைக்கழகங்களில் மாணவர் சங்கங்களே முகாமைத்துவத்தை செய்ய முயற்சிப்பதாகவும் அத்தகைய சங்கங்களின் செயற்பாடுகள் மாணவர்களை துன்பப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ள அவர் புதிய மாணவிகளுக்கு உள்ளாடை அணிவதற்கு தடைவிதிக்கும் அளவுக்கு பகிடிவதை இடம்பெறுவதாகவும் இவ்வாறான சம்பவங்கள் கேள்விபடும் ஒரே நாடு இலங்கை மட்டுமே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மகரகம பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். -(3)

Post a Comment

0 Comments