உலக தற்கொலை தடுப்பு தினமான இன்று தற்கொலையை தடுப்பதற்கு ஒன்றிணைவோம் எனும் விழிப்புணர்வுப் பேரணி ஒன்று இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது.
வவுனியா வைத்தியசாலை உளநலப்பிரிவின் ஏற்பாட்டில் வவுனியா பிராந்திய சுகாதாரப் பணிமனையில் ஆரம்பமாகிய விழிப்புணர்வு பேரணி வைத்தியசாலை வீதி வழியாக ஹொரவப்பொத்தானை வீதியை அடைந்து பசார் வீதி ஊடாக மணிக்கூட்டு கோபுர சந்தியை அடைந்து நகரசபை கலாச்சார மண்டபத்தில் நிறைவடைந்துள்ளது.
இதன்போது தற்கொரைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வுகளும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வவுனியா வைத்தியசாலை உளநல சேவைகள் பணிப்பாளர், மாவட்ட அரசாங்க அதிபர் எம். எம். ஹனீபா, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வி. பசுபதிராஜா, பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், சுகாதார சேவைகள் பணிமனையின் உத்தியோகத்தர்கள், பொது சுகாதாரப்பரிசோதகர்கள், பொது வைத்தியசாலை உளநல வைத்திய நிபுனர், உத்தியோகத்தர்கள், தாதிய கல்லூரி மாணவர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், கல்வியற்கல்லூரி மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், வர்த்தக சங்கப்பிரதிநிதிகள், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம், வரோட் நிறுவனத்தினர், விஷேட தேவைக்குட்பட்டோர்கள், எனப்பலரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை, அண்மைக்காலமாக வவுனியாவில் தற்கொலைகள் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



N5
0 Comments