வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் கடந்த அமர்வில், வடகிழக்கில் பொது வாக்கெடுப்பு, இலங்கையை பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன் றில் நிறுத்தல், இலங்கை மீது இராணுவத் தடை விதித்தல் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கிய 5 தீர்மான வரைவு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
சபையால் தீர்மான வரைவு ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தபோதும், அதனைச் செம்மைப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. தீர்மான வரைவைச் சமர்பித்த சிவாஜிலிங்கமும் அதற்கு இணங்கினார். தீர்மான வரைவைச் செம்மைப்படுத்த 6 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவால் தீர்மான வரைவு செம்மைப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 131ஆவது அமர்வு இன்று நடைபெறவுள்ளது. இந்த அமர்வில் செம்மைப்படுத்தப்பட்ட தீர்மான வரைவு நிறைவேற்றப் படும் என்று தெரியவருகின்றது.
0 Comments