Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பாம்புக் குட்டியை விழுங்கிய மனிதன்; சிகிச்சையின்போது அதிர்ச்சியுற்ற வைத்தியர்கள்!

உத்தர பிரதேசத்தில் குடிபோதையில் ஒருவர் வீதியால் சென்ற சிறு பாம்பு ஒன்றை எடுத்து கையில் வைத்திருந்துள்ளார். அப்போது அவரைச் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தவர்கள் அவரை கேலி செய்யும் வகையில் தவறான தூண்டுதல்களை கூறிக் கொண்டிருந்தனர்.
இதனால் போதையில் சுற்றி நின்றவர்கள் சொல்வதையெல்லாம் செய்தார். அப்படியே அவர்கள் கூறுவதைப் போன்று கையில் வைத்திருந்த சிறு பாம்பையும் விழுங்கியுள்ளார். அதன் பின்னர் எவ்வளவு வாந்தி எடுத்து முயற்சி செய்தும் பாம்பு வெளியே வரவில்லை இறுதியில் மயக்கமுற்று விழுந்துள்ளார்.
அதன் பின்னர் அங்கிருந்தவர்கள் குறித்த நபரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். வைத்தியசாலையில் 4 மணி நேரமாக சிகிச்சை நடைபெற்றது இருப்பினும் சிகிச்சை பலனின்றி குறித்த நபர் பரிதாபமாக இறந்துள்ளார்.

Post a Comment

0 Comments