Home » » ஆசிய கிண்ணகிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம்

ஆசிய கிண்ணகிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம்


14ஆவது ஆசிய கிண்ணகிரிக்கெட் போட்டித்தொடர் இன்று துபாயில் ஆரம்பமாகிறது

இம்முறைபோட்டித் தொடரின் முதல் போட்டியில் முன்னாள் ஆசிய சம்பியனான இலங்கை அணியும் இறுதியாக நடைபெற்ற ஆசிய கிண்ணத்தில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட பங்களாதேஷ் அணியும் மோதவுள்ளன. பகலிரவுப் போட்டிகளாக நடைபெறவுள்ள இம்முறைபோட்டி இலங்கை நேரப்படி இன்று மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

குழு பி போட்டியுடன் தொடர் ஆரம்பிக்கின்றது.

இதுவரை நடைபெற்ற ஆசியக் கிண்ணத் தொடர்களில் ஆறு தடவைகள் சம்பியனாகி இந்தியாவே அதிக தடவைகள் சம்பியனான அணியாகக் காணப்படுகின்றது. இது தவிர இறுதியாக 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற தொடரிலும் இந்தியாவே சம்பியனானது. தமது முதன்மை துடுப்பாட்ட வீரரான விராத் கோலிக்கு ஓய்வு வழங்கிவிட்டு இத்தொடரில் களமிறங்கும் இந்தியாவுக்கே கிண்ணத்தை தக்க வைக்கும் அதிகளவான வாய்ப்புகள் காணப்படுகின்றபோதும் இம்முறை ஆசியக் கிண்ணப் போட்டிகளானவை ஒருநாள் சர்வதேசப் போட்டிகளாகக் காணப்படுகின்ற நிலையில்இ பங்களாதேஷ் பாகிஸ்தான் இலங்கைஇ ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகளுக்கு இந்திய அணி சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை அணி பி குழுவில் இடம்பெற்றிருப்பதோடு அந்தகுழுவில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் உள்ளன. ஏ குழுவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மற்றும் ஹொங்கொங் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

இன்று 15ஆம் திகதி ஆரம்பமாகும் குழுநிலைப் போட்டிகள் 20ஆம் திகதிவரை நடைபெறவுள்ளன. இதனைத் தொடர்ந்து ஒவ்வொருகுழுவிலும் முதல் இரண்டு இடங்களைபிடிக்கும் அணிகள் இரண்டாவதுசுற்றான ‘சுப்பர் 4’ சுற்றுக்கு முன்னேறும்.

செப்டெம்பர் 21ஆம் திகதி ஆரம்பமாகும் இந்தசுற்றில் ஒவ்வொருஅணியும் ஏனைய அணியுடன் தலா ஒருமுறை பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

‘சுப்பர் 4 சுற்றில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் செப்டெம்பர் 28ஆம் திகதிநடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

இம்முறை ஆசியக் கிண்ணத்தில் ஆசிய கிரிக்கெட் சபையின் முழு அங்கத்துவ நாடுகளான இந்தியா இலங்கை பாகிஸ்தான் பங்களாதேஷ்இ ஆப்கானிஸ்தான் நேரடியாகத் தொடருக்குத் தகுதிபெற்றிருந்தன.

ஹொங் கொங் ஐக்கிய அரபு அமீரகம் ஓமான் நேபாளம் மலேஷியா சிங்கப்பூர் ஆகியவற்றுடன் தகுதிகாண் தொடரில் விளையாடி அதில் சம்பியனானனதன் மூலமே ஆசியக் கிண்ணத்துக்கு தகுதிபெற்றிருந்தது.

இவ்வாண்டு உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் 10ஆம் இடத்தையே பெற்று ஒருநாள் சர்வதேசப் போட்டி அந்தஸ்தை ஹொங் கொங் இழந்தபோதும் பல அணிகள் பங்கேற்கும் ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர்களின் அனைத்துப் போட்டிகளுக்கும் ஒருநாள் சர்வதேசப் போட்டி அந்தஸ்து வழங்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் சபை கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இதற்கமைய இவ்வாண்டு ஆசியக் கிண்ணத்தில் ஹொங் கொங் அணியும் ஒருநாள் சர்வதேசப் போட்டி அந்தஸ்தை பெறுகின்றது.

ஆசியாவில் கிரிக்கெட் விளையாடும் நாடுகளுக்கு இடையில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கோடுஇஆசிய கிரிக்கெட் சபை 1983 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. ஆசியக் கிரிக்கெட் சபையின் உருவாக்கத்தின் பின்னர் 1984 ஆம் ஆண்டு முதல் தடவையாக ஐக்கியஅரபு இராச்சியத்தில் நடைபெற்றது.

அதன்பிறகு 1995ஆம் ஆண்டுஅங்கு போட்டிகள் நடைபெற்றிருந்ததுடன் சுமார் 23 வருடங்களுக்குப் பிறகு இம்முறைஆசியகிண்ணப் போட்டிகள் மீண்டும் டுபாய்மற்றும் அபுதாபியில் நடைபெறுகிறது. -(3)maxresdefault
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |