Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

நுவரெலியாவிலும் மும்மொழி தேசிய பாடசாலை : அமைச்சரவை தீர்மானம்

நுவரெலியா – நானுஓயா பிரதேசத்தில் மும்மொழிகளுக்கான புதிய கலப்பு தேசிய பாடசாலையொன்றை ஆரம்பிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள கல்வி வசதிகளை மேலும் அபிவிருத்தி செய்வதற்காக அனைத்து வசதிகளையும் கொண்ட மும்மொழி கலப்பு தேசிய பாடசாலை ஒன்று 800 மில்லியன் ரூபா முதலீட்டுடன் நானுஓயா பிரதேசித்தில் அமைக்கப்படவுள்ளது.

தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையிலான மாணவர்களுக்கு கல்வி வழங்கும் பாடசாலையாக இது முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்காக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சமர்;ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. -(3)

Post a Comment

0 Comments