Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்ற தந்தையின் சடலத்தின் முன் ஆசி பெற்று சென்ற மாணவி!

அம்பாறை- குமண பிர​தேசத்தில் காட்டு யானை தாக்கி உயிரிழந்த தனது தந்தையின் உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டிக்கு முன்பாக, விழுந்து ஆசிர்வாதம் பெற்று மாணவி ஒருவர் நேற்று 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றினார்.
தனது தாயிடம் ஆசிர்வாதம் பெற்ற இந்த மாணவி, தந்தையின் பூதவுடல் வைத்திருந்த சவப்பெட்டியின் முன்பாக விழுந்து வணங்கி பரீட்சைக்குத் தயாரானார். குறித்த மாணவி கல்வி கற்கும் பாடசாலை அதிபர் மாணவியின் வீட்டுக்கு வந்து மாணவியை ஆறுதல்படுத்தி மஹானாபுர பரீட்சை மத்திய நிலையத்தில் பரீட்சை எழுதுவதற்காக தனது காரில் அழைத்துச் சென்றுள்ளார்.
37 வயதான குறித்த மாணவியின் தந்தை மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது, யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார்.
அதேவேளை, ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றுவதற்கு, தனது தாயாருடன் சென்று கொண்டிருந்த மாணவியின் மீதும் அவருடைய தாயின் மீதும் காட்டுயானைத் தாக்கியதில் அவ்விருவரும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம், மஹியங்கனை பகுதியில் நேற்று இடம்பெற்றது. தன்னுடைய தாயாருடன் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போதே, மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த இருவரும், மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹத்தன்னாவ மகா வித்தியாலத்தில் கல்விப்பயிலும் மாணவியும் அவருடைய 35 வயதான தாயாரான, டீ.எம்.சேபாலிகாவுமே இவ்வாறு காயமடைந்துள்ளனர். சம்பவத்தில் அந்த தாய்க்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன என்றும், மாணவி சிறுசிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளாரென்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனால் மாணவி ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்ற முடியாமல் போனது.

Post a Comment

0 Comments