செ.துஜியந்தன்
திருக்கோவில் பிரதேசத்தில் அமையவுள்ள ஷீரடிசாய் கருணாலயத்திற்கான அடிக்கல் நாட்டு விழா எதிர்வரும் 16 ஆம் திகதி காலை 9 மணிக்கு ஷீரடிசாய் கருணாலய வளாகத்தில் நடைபெறவுள்ளது.
ஷீரடிசாய் கருணாலய ஸ்தாபகர் திருமதி சீதா விவேக் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் கலந்து கொள்ளவுள்ளார். விசேட அதிதியாக மேலதிக அரசாங்க அதிபர் க.விமலநாதன, ஆன்மீக அதிதியாக சிவயோகச்செல்வன் சிவஸ்ரீ சாம்பசிவாச்சாரியார் உட்பட பிரதேச செயலாளர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments