Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தொடர்ந்து சம்பந்தனே எதிர்க்கட்சி தலைவர்: சபாநாயகர் அறிவிப்பு


பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனே தொடர்ந்தும் செயற்படுவார் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வுகள் இன்று வெள்ளிக்கிழமை காலை ஆரம்பமானத்தின்போது சபாநாயகர் இந்த அறிவிப்பை விடுத்தார்.
அரசியல் யாப்பு மற்றும் நாடாளுமன்ற சம்பிரதாயங்களின் அடிப்படையில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை மாற்ற முடியாது என சபாநாயகர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் சுமார் 70 உறுப்பினர்களை கொண்டுள்ள தமக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என ஒன்றிணைந்த எதிரணி எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருந்தது. இது தொடர்பில் கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதுடன், குறிப்பாக ஒன்றிணைந்த எதிரணி அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கருத்தை சபாநாயகர் பிரத்தியேகமாகக் கூறியிருந்தார்.
நேற்று மாலையும் விசேட கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்று இவ்விடயம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனையடுத்து சபாநாயகர் தீர்மானமிக்க அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments