Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இன்று செட்டிபாளையம் ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்

செ.துஜியந்தன்

இன்று செட்டிபாளையம் ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் திருக்கதவு திறத்தல்  மடை எழுந்தருளப் பண்ணல் ஆகியவற்றுடன் ஆரம்பமாகின்றது.என ஆலய தலைவர் விந்தியன் தெரிவித்தார்

தொடர்ந்து ஐந்து தினங்கள் நடைபெறும் உற்சவத்தில் 21ஆம் திகதி வீரகம்பம் வெட்டுதல் நிகழ்வும் 22 ஆம் திகதி அம்பாள் முத்துச்சப்புறத்தில் எழுந்தருளி பவனி வருதல் 23ஆம் திகதி பகல் 2மணிக்கு சக்தி யாகமும் நோற்பு கட்டுதலும் சிவன்  ஆலயத்தில் இருந்து தீக்கட்டை எழுந்தருளப் பண்ணல் தீமூட்டுதல் ஆகியன இடம் பெறும்.
24ஆம் திகதி  அதிகாலை 4மணிக்கு பேச்சியம்மன் பள்ளயமும்  அதனைத் தொடர்ந்து கடற்தீர்த்தம் ஆடும் நிகழ்வும் 7மணிக்கு தீ மிதிப்பு வைபவம் இடம்பெறவுள்ளது. தொடர்ந்து விசேட பூசையும்.அன்னதான நிகழ்வும் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments