Home » » பாண்டிருப்பு மாரியம்மன் கோவில் வீதியை செப்பனிடுமாறு மக்கள் கோரிக்கை

பாண்டிருப்பு மாரியம்மன் கோவில் வீதியை செப்பனிடுமாறு மக்கள் கோரிக்கை


செ.துஜியந்தன்

பாண்டிருப்பு கிராமத்தின் மத்தியில் அமைந்துள்ள பிள்ளையார் கோவிலிருந்து ஆரம்பமாகி மாரியம்மன் கோவிலூடாக சவக்காலை மற்றும் கடற்கரையை நோக்கிச் செல்லும் வீதியானது மிக நீண்டகாலமாக புனரமைப்புச் செய்யப்படாது குன்றும் குழியுமாக காட்சியளிக்கின்றது. இவ் வீதியினை புனரமைப்புச் செய்வதற்க்கு பிரதேச அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு பாண்டிருப்பு மக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.
கடந்த 2004இல் ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தத்தின் போது பாண்டிருப்புக் கிராமம் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. இங்கு மட்டும் 476 பேர் உயிரிழந்திருந்தனர். இந் நிலையில் பெருமளவிலான சொத்தக்களும், உடமைகளும் சேதமடைந்திருந்தன. ஆழிப்பேரலையினால் பாண்டிருப்பு கிராமத்தின் மத்தியில் அமைந்துள்ள குறித்தவீதியும் சேதமடைந்திருந்தது. 
இங்குள்ள பல வீதிகள் ஆழிப்பேரலையின் பின்னர் புனரமைப்புச் செய்யப்பட்ட போதிலும் மாரியம்மன் கோவில் ஊடாக சவக்காலை மற்றும் கடற்கரை நோக்கிச் செல்லும் பாதை இன்று வரை புனரமைக்கப்படாதுள்ளது. இவ் வீதியான பாண்டிருப்பு மக்களின் பிரதான போக்குவரத்து மார்க்கங்களில் ஒன்றாகவுள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான மக்கள், வியாபாரிகள் , மாணவர்கள் பயணம் செய்கின்றனர். அத்துடன் ஆலய ஊர்வலங்கள் மற்றும் இறந்தவர்களின் இறுதி ஊர்வலங்கள் கூட இவ் வீதியாலே செல்கின்றன. 
மேலும் இரவு வேளையில் இவ் வீதியால் பயணிப்பவர்கள் இடறி வீழ்ந்து விபத்துக்குள்ளாகியும் வருகின்றனர். மழை காலம் ஆரம்பமாவதற்கு முன்பு குறித்த வீதியினை புனரமைப்புச் செய்வதற்க்கு நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |